ஓஷோ - பிறக்கவும் இல்லை - இறக்கவும் இல்லை -
1931ஆம் வருடம் டிசம்பர் 11 முதல் 1990ஆம் வருடம் ஜனவரி 19 வரை இந்த பூமிக்கு வருகை புரிந்தார்.
யாரது சமாதியில் இப்படி எழுதி நாம் பார்த்திருக்கமாட்டோம். இதுதான் ஆச்சார்ய ரஜனீஷ் என்றும் பகவான் ஓஷோ என்றும் அறியப்படுபவரை பற்றிய சித்திரம்.
ஆச்சாரிய ரஜனீஷ் 1931ஆம் வருடம் மத்தியபிரதேச மாநிலத்தில் ஒரு சமணக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் ரஜனீஷ் சந்திரமோகன் என்பதாகும். சிறுவயதில் இருந்தே தியானத்தில் ஈடுபட ரஜனீஷ் தனது இருபத்தி ஒன்றாம் வயதில் 1953ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் நாள் ஞானம் அடைந்ததாக அறிவித்தார்.
தத்துவத்துறையில் முதுகலை பட்டம் பெற்ற ரஜனீஷ், ஜபல்பூர் பல்கலைக்கழகத்தில் தத்துவத்துறை பேராசிரியராகப் பணியாற்றினார். அதே காலகட்டத்தில் அவர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தத்துவ உரைகளை நிகழ்த்தினார். அன்றய காலகட்டத்தில் அரசு பின்பற்றிய சோசலிச பொருளாதாரக் கொள்கையை அவர் நிராகரித்து, இந்தியா முன்னேறவேண்டுமானால் அது அறிவியல் சிந்தனை, முதலாளித்துவ பொருளாதாரம் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு மூலமாகவே நடக்கும் என்று கூறி வந்தார்.
கீழைத் தத்துவத்தில் தேர்ச்சியும் ஆங்கிலத்தில் புலமையும் பெற்றிருந்த ஆச்சரிய ரஜனீஷை பலர் பின்பற்ற ஆரம்பித்தனர். .இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இவரது சீடர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. தனது பல்கலைக்கழக வேலையைத் துறந்த ரஜனீஷ் 1974 ஆம் ஆண்டு பூனா நகரில் தனது ஆசிரமத்தைத் தொடங்கினார்.
அதன்பிறகு அமெரிக்காவில் 1981ஆம் ஆண்டு தனது ஆசிரமத்தை தொடங்கிய ரஜனீஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. எந்தவிதமான ஆணையும் இன்றி அமெரிக்க காவல்துறை ரஜனீஷை பனிரெண்டு நாட்கள் சிறையில் அடைந்திருந்தது. அங்கே அவருக்கு மெல்லக் கொல்லும் விஷம் அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
அமெரிக்காவின் தூண்டுதலால் பல்வேறு நாடுகள் அவரைத் தங்கள் நாடுகளுக்கு உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டன. 1986ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் நாள் ரஜனீஷ் பாரதம் வந்து சேர்ந்தார். 1990ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் நாள் தனது ஐம்பத்து எட்டாம் வயதில் அவர் மரணம் அடைந்தார்.
இவரது பேச்சுகளும் நூல்களும் இந்திய சிந்தனைப் போக்கில் ஒரு புது விளக்கத்தை அளித்தது என்றால் அது மிகையில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக