சனி, 10 ஜனவரி, 2015

வெற்றிக்கான நூறு விதிகள்புகழ்பெற்ற தனிமனித மேம்பாட்டு பயிற்சியாளரான  ப்ரைன் டிரஸி எழுதியது இந்தப் புத்தகம். வெற்றி அடைவதற்கான நிச்சயமான நூறு மாற்றவியலாதா விதிகளைப் பற்றி இந்தப் புத்தகம் பேசுகிறது. மிக முக்கியமாக ஆசிரியர், படிக்கவும் புரிந்து கொள்ளவும் கடினமான சொற்களையோ அல்லது வாக்கியங்களையோ இந்த நூலில் பயன் படுத்தவில்லை.

புரிந்து கொள்ள எளிதாக இந்த விதிகள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

                          1. வாழ்க்கைக்கான விதிகள் 
                          2. வெற்றிக்கான விதிகள் 
                          3. வணிகத்திற்கான விதிகள் 
                          4. தலைமைப்பண்புக்கான விதிகள் 
                          5. பொருளாதார விதிகள் 
                          6. விற்ப்பனைக்கான விதிகள் 
                          7. பேரம் பேசுவதற்கான விதிகள் 
 8. நேர மேலாண்மைக்கான விதிகள் 

மனிதன் என்பவன் சிந்தனைகளின் தொகுப்பு. அதனால் சிந்தனைகளைச் சீர் செய்வதன் மூலம், மனிதன் தன வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்பதே ஆசிரியர் மீண்டும் மீண்டும் இந்தப் புத்தகத்தில் சொல்லும் கருத்து. எந்த நிகழ்ச்சியும் தற்செயலாக நடப்பதில்லை. எல்லா நிகழ்ச்சிக்குப் பின்னும் எதோ ஒரு காரணம் இருக்கிறது, அநேகமாக அது நமது செயலாகவே இருக்கிறது என்பதே இந்தப் புத்தகத்தின் அடிநாதம்.

உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்கும் மாணவர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்துப் புரிந்து கொண்டால் தங்கள் வாழ்கையில் அனுபவத்தின் மூலம் கற்றுக் கொள்ளும் பாடங்களை காலவிரயம் இல்லாமலே கற்றுக் கொண்டு முன்னேறிவிடலாம்.