பாரத நாட்டின் முக்கியமான அணுசக்திதுறை விஞ்ஞானியான திரு பத்மநாப கோபாலகிருஷ்ண ஐயங்காரின் பிறந்தநாள் இன்று.
1931ஆம் ஆண்டில் பிறந்த திரு ஐயங்கார் இயற்பியல்துறையில் தனது முதுகலைப் படிப்பை கேரள மாநிலத்தில் உள்ள திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தில் முடித்தார். Tata Institute of Fundamental Research நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கிய ஐயங்கார், இந்திய அணு சக்தி துறை தொடங்கப்பட்ட உடன் அதில் இணைத்தார். கனடா நாட்டின் புகழ்பெற்ற புரூக்ஹவுஸ் என்ற அறிஞரோடு இணைத்து பணியாற்ற நாட்டின் சார்பாக அனுப்பப்பட்டார்.
பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயற்பியல்துறை தலைவராகவும் பின்னர் அதே நிறுவனத்தின் தலைவராகவும் திரு ஐயங்கார் பணியாற்றினார். 1974ஆம் ஆண்டு முதல் முதலாக பாரதம் அணுகுண்டு வெடிப்பு சோதனையை நிகழ்த்தியபோது அதில் முக்கிய பங்கு வகித்தார். அவரது சேவையைப் பாராட்டி அவருக்கு 1975ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.
1990ஆம் ஆண்டு இந்திய அணுசக்திதுறையின் ( Atomic Energy Commission of India ) மத்திய அரசின் அணுசக்தித்துறையின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
அவரது தலைமையின்கீழ் அணுசக்தித்துறையில் பல்வேறு புதிய ஆராச்சிகளும் முன்னெடுப்புகளும் தொடங்கப்பட்டன. ஆராய்ச்சிசாலையில் இருந்து கிடைக்கும் தகவல்களைக் கொண்டு உடனடியாக மக்களுக்கு பயன்படும் தொழில்நுட்பங்கள் தகுதியான தொழில்சாலைகளுக்கு வழங்கப்பட தனியான பிரிவை அவரை நிறுவினார்.
ஹோமிபாபா, விக்ரம் சாராபாய், ராஜாராமண்ணா என்ற வரிசையில் நாட்டின் புகழ்பெற்ற விஞ்ஞானியான திரு ஐயங்கார் 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் நாள் தனது எண்பதாவது வயதில் காலமானார்.