பொதுவாக ஒரு புத்தகத்தை விமர்சிக்கும்போது, அந்தப் புத்தகத்திற்கான முன்னுரைக்கு விமர்சனம் எதுவும் வராது. ஆனால் இந்தப் புத்தகமும் அதன் முன்னுரையும் அந்த வரைமுறையில் அடங்காது.
பேசத்தெரிந்தவர்கள் பேசும்போது பொய்கூட உண்மையைப்போல காட்சி அளிக்கும். உண்மை வீட்டைவிட்டு இறங்கும் முன்னர் பொய் உலகைச் சுற்றி வந்து விடும் என்று ஒரு பழமொழி உண்டு.
இந்தப் புத்தகத்தின் ஆசிரியரும், அதற்க்கு முன்னுரை எழுதியவரும் நன்கு பேசத் தெரிந்தவர்கள், நன்றாக எழுதத் தெரிந்தவர்கள். பேசியே ஆட்சியைப் பிடித்த கட்சிக்காரர்களுக்கு பேசவும் எழுதவும் யாராவது கற்றா தரவேண்டும் ?
ஆனால் உண்மை ஒருநாளும் உறங்காது, இருண்ட மேகங்களைக் கிழித்து உண்மை எனும் ஒளி எப்போதுமே பிரகாசமாகத்தான் இருக்கும் என்பதே இந்த உலகம் கண்ட உண்மை.
அருமை நண்பர் புதுக்கோட்டை அப்துல்லா இந்தப் புத்தகத்திற்கு முன்னுரை எழுதி உள்ளார். அவரது முன்னுரையில் " பாஜக ஆட்சி அமைப்பதற்கு முன்னர் 9% இருந்த பொருளாதார வளர்ச்சி இப்போது 4% கீழே சென்று விட்டது" என்று எழுதிச் சென்று இருக்கிறார். நமது அலசலை இந்த வரியில் இருந்து ஆரம்பிப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன், அதனால்தான் ஒருநாளும் இல்லாத திருநாளாக முன்னுரைக்கு ஒரு மறுப்பு தரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.
2011 - 2012 ஆண்டுக்கான நிதி அறிக்கை முதல் 2016 - 2017 ஆண்டுக்கான நிதி அறிக்கைவரை மத்திய அரசு ஒத்துக்கொண்ட, பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த உண்மை அவர்கள் ( காங்கிரஸ் மற்றும் பாஜக நிதிமந்திரிகள் )வாய்மொழியாக இங்கே
Key Features of
Budget 2011-2012
Gross Domestic Product (GDP) estimated to have grown at 8.6
per cent in 2010-11 in real terms. Economy has shown remarkable resilience.
Indian economy expected to grow at 9 per cent with an
outside band of +/- 0.25 per cent in 2011-12
Key Features of
Budget 2012-2013
GDP is estimated to grow by 6.9 per cent in 2011-12, after
having grown at 8.4 per cent in preceding two years
GDP growth estimated at 6.9 per cent in real terms in
2011-12. Slowdown in comparison to preceding two years is primarily due to
deceleration in industrial growth.
India’s GDP growth in 2012-13 expected to be 7.6 per cent
+/- 0.25 per cent
Key Features of
Budget 2013-2014
Getting back to potential growth rate of 8 percent is the
challenge facing the country.
Slowdown in Indian economy has to be seen in the context of
slowing global economic growth from 3.9 per cent in 2011 to 3.2 per cent in
2012.
Budget 2014-2015
The steps that I will announce in this Budget are only the
beginning of a journey towards a sustained growth of 7-8 per cent or above
within the next 3-4 years along with macro-economic stabilization that includes
lower levels of inflation, lesser fiscal deficit and a manageable current
account deficit
Key Features of
Budget 2015-2016
After inheriting an economy with sentiments of “doom and gloom”
with adverse macroeconomic indicators, nine months have seen at turn around,
making India fastest growing large economy in the World with a real GDP growth
expected to be 7.4% (New Series)
GDP growth in 2015-16, projected to be between 8 to 8.5%.
Key Features of
Budget 2016-2017
Growth of Economy accelerated to 7.6% in 2015-16.
இதற்கான சுட்டிகள்
Budget 2011 – 2012
Budget 2012 – 2013
Budget 2013 – 2014
Budget 2014 – 2015
Budget 2015 – 2016
Budget 2016 – 2017
ஆக காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி 9% மேலாக இருந்தது என்பது உண்மைக்கு மாறான கூற்று. இப்போதைய வளர்ச்சி விகிதம் 4% கீழே என்பதும் உண்மை இல்லை.
பொருளாதார வளர்ச்சிக்கான அளவுகோலை இந்த அரசு மாற்றிவிட்டது, எனவே பாஜக அரசு கூறும் வளர்ச்சி சதவிகிதம் என்பது உண்மை இல்லை என்று இப்போது நண்பர் அப்துல்லா கூறுவார்.
பொருளாதார வளர்ச்சிக்கான அளவுகோலை இந்த அரசு மாற்றிவிட்டது, எனவே பாஜக அரசு கூறும் வளர்ச்சி சதவிகிதம் என்பது உண்மை இல்லை என்று இப்போது நண்பர் அப்துல்லா கூறுவார்.
ஆமாம், பொருளாதார வளர்ச்சிக்கான அளவுகோல் மாற்றப்பட்டு உள்ளது. எதையோ ஒன்றை அடிப்படியாக வைத்து, அந்த அளவுகோலின் படி வளர்ச்சியா வீழ்ச்சியா என்றுதான் எதையும் கூறமுடியும். அதாவது அம்பானியையுடன் ஒப்பிட்டால் நான் ஏழை, ஆனால் என் அருகில் இருப்பவரைப் பார்த்தால் நான் பணக்காரன் என்பதுபோல்தான்.
இந்த அளவுகோலுக்கான ஆண்டு மாற்றப்பட்டு உள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கான அளவுகோல் 2004 - 2005ஆம் ஆண்டில் இருந்து 2011 - 2012ஆம் ஆண்டு என்று மாற்றப்பட்டு உள்ளது.
உதாரணமாக இருபது ஆண்டுகளுக்கு முன்னால் பொருளாதாரத்திற்குப் பங்களித்த துறைகளின் போக்கு முழுவதுமாக மாறி, பல புதியதுறைகள் பொருளாதாரத்தின் போக்கை நிர்ணயம் செய்யும். உதாரணமாக கணினித் துறை, தொலைத்தொடர்ப்பு, புதியமுறையில் மின்சாரம் உற்பத்தி செய்வது, கணினி நிரல் எழுதுவது என்பது போன்ற துறைகள் மிகச் சமீபகாலத்தில் பெரும்பாய்ச்சலைக் கொண்டுவந்து உள்ளது. எனவே பழைய முறைகளை வைத்து புதிய காலத்தின் போக்கைக் கணிப்பது என்பது சரியான முறையாக இருக்காது.
உதாரணமாக மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் என்பதை அளக்கும் நிறுவனங்களின் பட்டியல் என்பது காலத்திற்கேற்ப மாற்றப்படுகிறது. அதுபோல பொருளாதார வளர்ச்சியை முன்னர் ஒரு தொழில்சாலையின் மொத்த உற்பத்தியின் எண்ணிக்கையை வைத்து மதிப்பிடப்பட்டது, இப்போது அதன் பொருளாதார மதிப்பை வைத்து அழைக்கப்படுகிறது.
உதாரணமாக இருபது ஆண்டுகளுக்கு முன்னால் பொருளாதாரத்திற்குப் பங்களித்த துறைகளின் போக்கு முழுவதுமாக மாறி, பல புதியதுறைகள் பொருளாதாரத்தின் போக்கை நிர்ணயம் செய்யும். உதாரணமாக கணினித் துறை, தொலைத்தொடர்ப்பு, புதியமுறையில் மின்சாரம் உற்பத்தி செய்வது, கணினி நிரல் எழுதுவது என்பது போன்ற துறைகள் மிகச் சமீபகாலத்தில் பெரும்பாய்ச்சலைக் கொண்டுவந்து உள்ளது. எனவே பழைய முறைகளை வைத்து புதிய காலத்தின் போக்கைக் கணிப்பது என்பது சரியான முறையாக இருக்காது.
உதாரணமாக மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் என்பதை அளக்கும் நிறுவனங்களின் பட்டியல் என்பது காலத்திற்கேற்ப மாற்றப்படுகிறது. அதுபோல பொருளாதார வளர்ச்சியை முன்னர் ஒரு தொழில்சாலையின் மொத்த உற்பத்தியின் எண்ணிக்கையை வைத்து மதிப்பிடப்பட்டது, இப்போது அதன் பொருளாதார மதிப்பை வைத்து அழைக்கப்படுகிறது.
அதுபோல, உத்தேசமாக ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு உள்ளாக இந்த அளவுகோல் வருடம் மாற்றப்படுகிறது. இந்த முறை நடந்த மாற்றத்தையும் சேர்த்து சுதந்திர இந்தியாவில் இதுவரை அளவுகோல் ஆண்டு ஏழு முறை மாற்றப்பட்டு உள்ளது. மாற்றமே தவறு என்றால் இதற்க்கு முன்நடந்த ஆறு மாற்றங்களுக்கு யாரைக் காரணம் காட்ட ?
அதுபோக ஒரு அரசாங்கம் என்பது ஒரு நிரந்தரமான ஓன்று, It is a perpetual entity. ஒரு கட்சியின் ஆட்சி மாறி இன்னொரு கட்சி ஆட்சிக்கு வரும்போது முன்னால் இருந்த கட்சியின் எல்லா நடைமுறைகளையும் மாற்ற முடியாது, முந்தைய ஆட்சி அளித்த எல்லா உத்திரவாதங்களையும் இல்லை என்று கூறிவிட முடியாது. இங்கே இந்த மாற்றத்தை முன்னெடுத்தது முந்தய காங்கிரஸ் அரசாங்கம்.
எனவே இன்றய பாஜக அரசு அளவுகோலை மாற்றி ஏமாற்றிவிட்டது என்றால், நீங்கள் கேள்வி கேட்கவேண்டியது மன்மோகன் சிங் அவர்களின் தலைமையிலான காங்கிரஸ் அரசைத்தான், இன்றய அரசை இல்லை. அன்றய அரசின் கொள்கைமுடிவை இந்த அரசு செயல்படுத்தி உள்ளது.
சரி பழையமுறைப்படி வளர்ச்சி விகிதத்தைக் கணக்கிட்டால் வளர்ச்சி 4% கீழாகவா இருக்கிறது. இந்தச் சுட்டி வளர்ச்சி விகிதம் 5.2% என்று கூறுகிறது.
பொருளாதார வளர்ச்சிக்கான அளவுகோல் ஆண்டு பற்றித் தெரிந்துகொள்ள
http://indianexpress.com/article/india/india-others/explained-the-base-of-growth
http://www.affairscloud.com/base-year-concept/
http://www.firstpost.com/business/devil-in-the-detail-choice-of-base-year-in-new-gdp-series-and-revisions-need-clarity-2301386.html
முன்னுரைக்கே ஒரு மறுப்புரை தேவையா, அதுவும் முன்னுரையில் வரும் ஒரு வரியை வைத்துக்கொண்டு அதை இப்படி மறுக்கவேண்டுமா என்ற கேள்வி எழலாம். ஆனால் இந்தப் புத்தகத்தின் கருதுகோளே திரு அப்துல்லா எழுதிய முன்னுரையின் இந்த வரியை முன்வைத்துதான் இருக்கிறது, எனவே இந்தப் புத்தகத்தை மறுக்க, முதல் வாதமாக இந்த வரியை மறுத்துதான் ஆகவேண்டும்.
இந்தப் புத்தகத்தில் நண்பர் நரேன் கூறாமல் விட்ட உண்மைகள் பற்றியும், திரித்துக் கூறியது பற்றியும் அடுத்த பதிவுகளில் பார்ப்போம்.
இருளில் இருந்து உண்மைக்கான பயணத்தில்
இறுதிவரை நடைபோடும் உறுதியை
ஆண்டவா,
எப்போதும் எனக்கு அருள்க
விளக்கம் :
திரு அப்துல்லா அவர்கள் தற்போதைய வளர்ச்சி விகிதம் 6% என்றும் கச்சா எண்ணெய் விலை 40 டாலர் என்றுதான் எழுதி இருந்தார், ஆனால் புத்தகம் அச்சாகும்போது மாறிவிட்டது என்று என்னிடம் கூறினார்.
இந்த மறுப்பு என்பது புத்தகத்தில் வெளியான தகவலை வைத்து மட்டுமே எழுதப்பட்டு இருக்கிறது.
முன்னுரைக்கு மறுப்புரை ரொம்ப மதிப்பு மிகுந்த உரையாக...
பதிலளிநீக்குgood rejoinder.. how many lies!!
பதிலளிநீக்குVery good
பதிலளிநீக்குஇந்தப் புத்தகம் குறித்து நானும் சில கருத்துக்களை எழுதவிருக்கிறேன். தாங்கள் குறிப்பிடாத விஷயங்களை மட்டும் எழுதலாமென்று உத்தேசம். பார்க்கலாம். :-)
பதிலளிநீக்கு